சவூதி அரேபிய ஹஜ் நிறுவனத்திற்கான வைப்புத்தொகையைச் செலுத்துதல்
உங்கள் ஹஜ் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள ரூ. 750,000 வைப்புத்தொகை சவூதி அரேபிய ஹஜ் நிறுவனத்திற்கான ஆரம்பக்கட்டக் கட்டணங்களைச் செலுத்துவதற்காக மாற்றப்படும்.
Next steps after completion of the initial Hajj deposit requirement
அன்பார்ந்த ஹஜ் விண்ணப்பதாரரே,
ஹஜ் 1448 ஹி. / 2027 ஆம் ஆண்டிற்கான ரூ. 750,000 வைப்புத்தொகையை செலுத்தி நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள். ஜஸாகல்லாஹு கைரன்.
ஹஜ் பயணச் செயற்பாட்டில் அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பின்வருமாறு:
உங்கள் ஹஜ் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள ரூ. 750,000 வைப்புத்தொகை சவூதி அரேபிய ஹஜ் நிறுவனத்திற்கான ஆரம்பக்கட்டக் கட்டணங்களைச் செலுத்துவதற்காக மாற்றப்படும்.
2027 ஆம் ஆண்டிற்காக திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களின் பட்டியலிலிருந்து ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் பயண ஏற்பாட்டாளரைத் தெரிவுசெய்து, அவருடன் ஒப்பந்தம் செய்து உங்கள் ஹஜ் பயண முன்பதிவை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஹஜ் பயண ஏற்பாட்டாளரும் அதிகபட்சம் 100 யாத்திரிகர்களை மட்டுமே இணைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
2026 செப்டம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஒரு ஹஜ் பயண ஏற்பாட்டாளருடன் உங்கள் ஹஜ் பயண இடத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
ஹஜ் வசதிகள் மற்றும் பயணப் பேக்கேஜ் மொத்தச் செலவு நீங்கள் தெரிவுசெய்யும் ஹஜ் பயண ஏற்பாட்டாளருடன் நேரடியாகக் கலந்துரையாடி தீர்மானிக்கப்பட வேண்டும்.
(Amana Bank) செலுத்தப்பட்ட ரூ. 750,000 வைப்புத்தொகையைக் கழித்த பின்னர் மீதமுள்ள தொகையை ஹஜ் பயண ஏற்பாட்டாளருக்கு செலுத்த வேண்டும்.
இலங்கையிலிருந்து புறப்படும் நேரத்திலிருந்து மீண்டும் இலங்கைக்குத் திரும்பும் வரையிலான அனைத்து சேவைகள் மற்றும் வசதிகளையும் உள்ளடக்கிய முழுமையான பேக்கேஜாக இருக்க வேண்டும்.
சவூதி அரேபிய சுகாதார அமைச்சும் பொது சுகாதார அதிகாரசபையும் குறிப்பிட்ட சுகாதாரத் தேவைகளை கட்டாயமாக்கியுள்ளது. பின்வரும் நிலைகள் உள்ள யாத்திரிகர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்படாது:
விண்ணப்பம் அல்லது தெரிவுசெய்யும் நடைமுறையின் எந்தக் கட்டத்திலும் தவறான தகவல் வழங்கியதாகவோ முக்கியமான உண்மைகளை மறைத்ததாகவோ உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாகத் தகுதி நீக்கம் செய்யப்படுவார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படாது.
ஒதுக்கப்பட்ட ஹஜ் இடத்தை வேறு நபருக்கு மாற்றவோ அல்லது அந்த யாத்திரிகருக்குப் பதிலாக வேறு நபரை நியமிக்கவோ முடியாது. ஏற்படும் எந்தவொரு வெற்றிடமும் காத்திருப்புப் பட்டியலில் உள்ள முன்னுரிமை வரிசைப்படி அடுத்த தகுதியான யாத்திரிகருக்கு மட்டுமே வழங்கப்படும்.
අස්සලාමු අලයිකුම්, හජ් අයදුම්කරුවනි,
1448 හිජ්රි / 2027 හජ් වන්දනාව සඳහා අවශ්ය තැන්පතු මුදල ගෙවීමේ අවශ්යතාව සම්පූර්ණ කිරීම පිළිබඳව අපගේ සුභාශිංසන පිරිනමන්නෙමු. ජසාකල්ලාහු ඛයිරන්.
හජ් වන්දනා ක්රියාවලියේ මීළඟ පියවර පිළිබඳව මෙම නිවේදනය මගින් දැනුම් දෙනු ලැබේ.
ඔබගේ හජ් ගිණුමේ තැන්පත් කර ඇති මුදල, සෞදි අරාබියේ හජ් බලධාරීන් වෙත සිදු කළ යුතු මූලික ගෙවීම් පියවීම සඳහා සෞදි හජ් ගිණුමට මාරු කරනු ලැබේ.
හජ් කමිටුව විසින් අනුමත කරන ලද හජ් නියෝජිත ආයතනයක් තෝරාගෙන එම ආයතනය සමඟ හජ් වන්දනාව සම්බන්ධ ගිවිසුමකට එළඹිය යුතුය.
එක් හජ් නියෝජිත ආයතනයකට උපරිම වශයෙන් වන්දනාකරුවන් 100 දෙනෙකු පමණක් ඇතුළත් කර ගැනීමට අවසර ඇත.
2026 සැප්තැම්බර් 30 දින හෝ ඊට පෙර හජ් නියෝජිත ආයතනය සමඟ ඔබගේ ස්ථානය තහවුරු කරගත යුතුය.
හජ් පහසුකම් සහ සේවා පැකේජයේ මුළු වියදම ඔබ විසින් තෝරාගනු ලබන හජ් නියෝජිත ආයතනය සමඟ සෘජුව සාකච්ඡා කර තීරණය කළ යුතුය.
“My Hajj Plan” ගිණුමට ගෙවා ඇති රු. 750,000 තැන්පතු මුදල අඩු කිරීමෙන් පසු ඉතිරි මුදල නියෝජිත ආයතනය වෙත ගෙවිය යුතුය.
ශ්රී ලංකාවේ ගුවන් තොටුපළෙන් පිටත්වීමේ සිට නැවත ශ්රී ලංකාවට පැමිණීම දක්වා සියලුම සේවා සහ පහසුකම් ඇතුළත් සම්පූර්ණ පැකේජයක් විය යුතුය.
සෞදි අරාබියේ සෞඛ්ය අමාත්යාංශය සහ මහජන සෞඛ්ය අධිකාරිය විශේෂ සෞඛ්ය අවශ්යතා අනිවාර්ය කර ඇත. පහත තත්ත්වයන්ගෙන් පෙළෙන වන්දනාකරුවන්ට හජ් සඳහා අවසර නොලැබේ:
අයදුම්පත් ඉදිරිපත් කිරීමේ හෝ තෝරා ගැනීමේ ක්රියාවලියේ ඕනෑම අවස්ථාවක ව්යාජ තොරතුරු ලබා දී ඇති බව හෝ වැදගත් කරුණු සඟවා ඇති බව තහවුරු වුවහොත්, සුදුසුකමෙන් වහාම ඉවත් කරනු ලැබේ. එවැනි අවස්ථාවලදී තවදුරටත් අභියාචනයක් සලකා බලනු නොලැබේ.
වන්දනාකරුවන් සඳහා වෙන් කර ඇති ස්ථාන වෙනත් පුද්ගලයෙකුට මාරු කළ නොහැකි අතර වෙනත් පුද්ගලයෙකු ආදේශ කිරීමටද නොහැක. යම් ස්ථානයක් හිස් වුවහොත් එය පොරොත්තු ලේඛනයේ ප්රමුඛතා අනුපිළිවෙළ අනුව ඊළඟ සුදුසු අයදුම්කරු වෙත පමණක් ලබා දෙනු ලැබේ.
Assalamu Alaikum Hajj Applicant,
We congratulate you for complying with the deposit requirement for Hajj 1448AH / 2027 – Jazakallah Khair. This notice outlines the next steps in the pilgrimage process.
Your deposit will now be transferred from your Hajj account to settle initial payments to the Saudi Arabian Hajj authorities.
You are required to select and contract with an approved Tour Operator from the list provided by the Hajj Committee to secure your group reservation.
Each Operator is permitted to accommodate a maximum of 100 pilgrims.
You must secure your placement with a Tour Operator on or before 30 September 2026.
Hajj facilities and package costs must be directly negotiated with the Operator of your choice. Each pilgrim is required to pay the Operator the balance amount after deducting the deposit of Rs. 750,000 paid to the Department.
Your Hajj service package must be comprehensive and include all services and facilities from the Sri Lankan airport until your return to Sri Lanka, including:
The Saudi Ministry of Health, in coordination with the Public Health Authority, has mandated specific health requirements. Pilgrims suffering from the following conditions will not be permitted to obtain a Hajj permit:
Any pilgrim found to have provided falsified information or concealed material facts in connection with the application or selection process, at any stage, shall be disqualified immediately upon such establishment by the Sri Lanka Hajj Mission. No further appeal shall be entertained in such cases.
Pilgrim slots are strictly non-transferable and non-replaceable under any circumstances. Once allocated, a slot cannot be transferred to another person, nor can a pilgrim be replaced. Any vacancy arising shall be filled strictly from the waiting list in order of priority.